மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Watch || தம்பதியின் சிறிய ஆசையினால் நேர்ந்த பெரிய விபரீதம்..!! கதறும் குழந்தைகள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்த்ரா கடற்கரையில் பாறைகள் நிறைந்து காணப்படும். அப்பாறைகள் மீது காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
தற்போது மழை காலம் என்பதால் அப்பகுதியில் கடல் அலையின் சீற்றம், அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் ஜோதி என்னும் 27 வயது உடைய பெண் தனது கணவர் முகேஷ் உடன் பாறையில் அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்றுள்ளார்.
இருவரும் பறை ஒன்றில் உட்கார்ந்து வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது கடல் அலையின் வேகம் அதிகரித்து பாய்ந்து வந்து அவர்களை தொட்டு சென்றது. இதனால் பயந்து போன ஜோதியின் குழந்தைகள் கரையில் நின்று கொண்டு அம்மா வாருங்கள் என்று கத்தினார்கள்.
ஆனால் திடீரென்று வந்த ராட்சச அலையினால் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் குழந்தைகள் கூச்சலிட்டனர். பின்பு அங்கு வந்த மீட்பு குழுவினர்கள் ஜோதியின் கணவரை மட்டுமே காப்பாற்றினார்கள். 20 மணி நேரத்தில் பின் தான் ஜோதியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.