மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்..! திடீரென பின்னால் இருந்து கேட்ட சத்தம்..! சற்று நொடியில் நடந்த பகீர் சம்பவம்.!
வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை புலி தாக்கியதில் அவர் உயிர் இழந்துள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமோனி சர்க்கார். 50 வயது பெண்மணியான இவர் தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். இவர் வேலை செய்யும் வயலிலிருந்து சுமார் 150 மீ தூரத்தில்தான் பிலிபிது புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் இருந்து வெளியே வந்த புலி ஓன்று ரமோனி சர்க்கார் பின்னால் இருந்து பதுங்கி வந்து அவரை தாக்கியுள்ளது. புலி தாக்கியதை அடுத்து ரமோனி சர்க்கார் அலறியுள்ளார். ரமோனி சர்க்காரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர, மக்கள் கூட்டத்தை பார்த்த புலி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்நிலையில், கழுத்தில் பெரிய காயத்துடன் ரமோனி சர்க்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே, இதேபோல் 2 பேர் ஏற்கனவே புலி தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், மனித எல்லைக்குள் புலிகள் வராமல் தடுக்க மின்சார ஒயர் போடப்பட வேண்டும் என்று மக்கள் போராத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் வேலிகள் அமைத்துத்தருவதாக போலீசார் உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், புலி தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.