திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முஸ்லீம் இளைஞருடன் ஏன் பழகினாய்? உனக்கு இந்து ஆண்கள் யாரும் கிடைக்கவில்லையா?. என கேட்டு அடித்த போலீஸ்!. மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்!.
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் போலீசார் ஒருவர் மாணவியிடம் உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? எதற்காக முஸ்லீம் இளைஞருடன் பழகுகிறாய் என கேட்டு அந்த மாணவியை அடித்த வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து அந்த பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில் “நாங்கள் வீட்டில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்குள் வந்தனர்.
Shocking video of the girl who was rescued by cops from Vishwa Hindu Parishad goons who were harassing a Meerut couple for Love Jihad. The cops after rescuing the girl began assaulting her in the police van calling her out for chosing Muslim partner and made video. @uppolice pic.twitter.com/l0eIPmJKnp
— Piyush Rai (@PiyushRaiTOI) 25 September 2018
எங்க இருவரையும் வெளியில் இழுத்து வந்து, நீ ஒரு இந்து மதத்தை சேர்ந்தவள், முஸ்லீம் நபருன் பழகுகிறாயா? உனக்கு இந்து ஆங்கள் யாரும் கிடைக்கவில்லையா என கேட்டு என்னை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து எனது நண்பர்மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்க வற்புறுத்தினர். நானும் எனது பெற்றோரும் மறுத்துவிட்டோம். காவல் துறையினர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டனர் எனத் தெரியவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார்.