ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆண்களே தயங்கிய நிலையில் ஆந்திராவில் பெண் எஸ்ஐ செய்த துணீகர சம்பவம்!
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அடவி கொத்தூர் என்ற கிராமத்திலுள்ள உள்ள வயல்வெளியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அடுத்து காசிபுக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை அப்புறப்படுத்த அங்கு இருந்த மக்களை உதவிக்கு அழைத்துள்ளார் சிரிஷா. ஆனால் உதவிக்கு யாரும் முன் வரவில்லை.
அதனையடுத்து சிரிஷா தனது உதவியாளருடன் வயல்வெளியில் கிடந்த முதியவரின் சடலத்தை தனது தோளில் சுமந்து 2கிலோ மீட்டர் தூக்கி கொண்டு சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.