திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இருபெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்! லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
குஜராத் மாநிலம், மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில்
பொறுப்பாளாராக இருப்பவர் எஸ்ஐ ஸ்வேதா ஜடேஜா. இவரிடம் கடந்த ஆண்டு இருபெண்கள் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேனல் ஷா என்பவர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாத ஸ்வேதா இந்த வழக்கில் இருந்து அவரை தப்பித்து விடுப்பதற்காக கேனல் ஷாவிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து கேனல் ஷாவின் சகோதரர் மூலம் 20 லட்சம் லஞ்சமாக வாங்கிக்கொண்ட ஸ்வேதா அவர்மீது மீது சாதாரண குற்றத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து ஸ்வேதா தரவேண்டிய மீதம் 15 லட்சத்தை கொடுக்குமாறு வற்புறுத்தி மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரியவந்த நிலையில் அவர்கள் ஸ்வேதா ஜடேஜாவை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் அவரை அதிரடியாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதாவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருபெண்கள் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.