மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் நிர்வாண ஊர்வலம்; 2023-ன் கொடுமையான விஷயங்கள்... நினைத்தாலே நெஞ்சம் பதறும்..!
2023-ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டில் சர்வதேச அளவில் உலுக்கிய பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான விஷயத்தையும் நாம் தற்போது நினைவு கூறும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஏனெனில் மக்கள் அறிய நடைபெறும் தாக்கமே அடுத்தடுத்த பல்வேறு மாற்றங்களுக்கு முதல் படியாக அமையும். அந்த வகையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது தற்போதைய காலகட்டத்தில் கட்டாயமாகிறது.
அதனை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆண்டில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விஷயம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனை கொடுக்க மறுத்த பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பலாத்காரம் செய்து நிர்வாணப்படுத்தி வீடியோ வெளியிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றதும் நடந்தது.
இறுதியாக கடந்த சில வாரத்திற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற காதல் திருமண விவகாரத்தில் இளைஞரின் தாய் கொடூரமாக தாக்கப்பட்டு, வீடு சூறையாடப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் இந்த ஆண்டில் மட்டும் நடந்து மக்களிடம் அதிகளவு சென்றவை ஆகும். வெளி வராதவை ஏராளம் என்றும் கூறலாம்.