உலகளவில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் முதல் இடத்தை பிடித்தது இந்தியா! எந்த மாநிலம் தெரியுமா?



world level traffic place

உலக நகரங்களில் நிலவும் வாகன நெரிசல் குறித்து ஆப்பிள், ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மேப் வசதியை வழங்கும் டாம் டாம் எனும் நிறுவனம், உலகின் பல்வேறு நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியது. மேலும் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 2018ஆம் ஆண்டில் 56 நாடுகளிலுள்ள 403 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரகளின் பட்டியலில் மும்பை நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 

traffic

போக்குவரத்து நெரிசலால் மும்பையில் மட்டும் 65 சதவிகிதம் கூடுதலாக பயண நேரம் செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 58 சதவிகித கூடுதல் நேரத்தை பெற்று டெல்லி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆனலும் டெல்லியில் 2018ஆம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் 4 சதவிகிதம் குறைந்துள்ளது.