பழங்கால நினைவுச் சின்னங்களை நாளை முதல் 15 ஆம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம் மத்திய அரசு அறிவிப்பு..!
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி, இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு பல துறைகள் சலுகைகளை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ஆம் தேதி வரை மக்கள் கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், பகுதிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் 5-ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தார்.