மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நா ஏறி இறங்காத கடையே இல்லைங்க சார்! என் தலை சைசுக்கு எங்கேயுமே ஹெல்மெட் கிடைக்கவில்லை சார்! திகைத்துப்போன போலீசாரின் செயல்!
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தபின்னர் நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் விதிக்கப்படும் அபராதம் மிகவும் அதிகமாக இருந்ததால் வாகனத்தை கொளுத்திய சம்பவம் கூட சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் ஹெல்மெட் போடாததற்கு ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு, போலீசார் அபராதம் விதிக்காமல் அவரை அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது, அந்த வழியாக ஜாகீர் மாமோன் என்னும் நபர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். அவரை நிறுத்தி விசாரித்த போலீசார் அவருக்கு அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் அதிர்ச்சி தகவலை கூறினார். சார் எனக்கு அபராதம் போட்றாதீங்க, நான் சட்டத்தை மதிக்கிறவன். ஆனா என் தலைக்கு ஏற்ற ஹெல்மெட் எந்த கடையிலையும் கிடைக்கவில்லை.
நான் எத்தனையோ கடை ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் எனது தலைக்கு ஏற்ற மாதிரி ஹெல்மெட் எந்த கடையிலும் இல்லை. என்னிடம் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் உள்ளன. இந்த ஹெல்மெட் விஷயத்தில மட்டும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது போலவே அவரது தலையின் அளவும் பெரிதாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பழக்கடை வைத்திருக்கும் ஜாகீர் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது, அபராதத்துக்கும் சேர்த்து பணம் எடுத்துக்கொண்டு தான் வீட்டைவிட்டு வெளியில் வருவாராம் என்பது குறிப்பிடத்தக்கது.