மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு கையில் பீட்சா... மறு கையில் காதலி... தந்தை வந்ததால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்.!
ஹைதராபாத்தில் நள்ளிரவில் காதலியுடன் வீட்டிற்கு சென்ற நபர் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தில் போரபண்டா பகுதியைச் சேர்ந்தவர் சோயப். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு பீட்சா உடன் சென்றிருக்கிறார். இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது காதலியின் தந்தை படிக்கட்டுகளில் ஏறி வரும் சத்தம் கேட்டிருக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்த கம்பிகளை பிடித்து நான்காவது மாடியில் இருந்து கீழே இறங்கி இருக்கிறார். அப்போது தவறுதலாக கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இறந்த இளைஞரின் தந்தை தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.