திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆத்தாடி... இளைஞரை வான்நோக்கி தூக்கிச் சென்ற பட்டம்.! அந்தரத்தில் பறந்த இளைஞர்.! பதறவைக்கும் வீடியோ.!!
பட்டம் விடுவது என்றாலே இளைஞர்களுக்கு குஷி தான். சென்னையில் அடுத்தவர் பட்டத்தை அறுக்கும் போக்கில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள். ஆனால் கயிறு அறுந்து சாலையில் செல்பவர்களின் கழுத்தை அறுத்து பலரும் இறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது, எனவே, மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ராட்சத பட்டங்களை தயாரித்துள்ளனர். பின்னர் அதிக காற்றும் வீசும் பகுதிக்கு வந்த அவர்கள் அந்த பட்டத்தை பறக்க விட்டுள்ளனர். அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுவதற்குள், பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விட்டு விட்டனர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டத்தினால் தூக்கி செல்லப்பட்ட இளைஞர். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்#SriLanka #Kite #JananesanNews pic.twitter.com/bUgF0BEpjQ
— JANANESAN News (@JananesaN_NewS) December 21, 2021
அப்போது காற்று அதிகமாக வீசியதால் முன் பக்கத்தில் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் பட்டத்துடன் தூக்கிச் செல்லப்பட்டார். அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரது நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த நிலையில் காற்றின் வேகம் சற்று தணிந்து பட்டம் கீழே இறங்கியதும் கயிற்றின் பிடியை அவர் விட்டுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.