அக்கா திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தில் ஐபோன் வாங்கிய தம்பி... தந்தை கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு.!



young-man-from-up-commits-suicide-at-mumbai-police-inve

தனது அக்கா கல்யாணத்திற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை திருடி ஐ போன் வாங்கிய இளைஞர்  மும்பையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்தவர் ராஜவர்தன். 17 வயதான இவர் மும்பையில் தனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார் . இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் ராஜவர்தன் விடுமுறை முடித்துவிட்டு திரும்பி வரும்போது தந்தையிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் திருடி வந்திருக்கிறார்.

India

இந்நிலையில் மும்பை கல்யாண் ரயில் நிலையம் அருகே உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தபோது  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது ராஜாவர்தன் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவரது பாக்கெட்டில் ஒரு ஐ போன் ஒன்றும் இருந்துள்ளது.

இது குறித்து அவரது மாமாவிடம் விசாரித்த போது  விடுமுறைக்குச் சென்ற ராஜவர்தன்  தனது சகோதரியின் திருமணத்திற்காக தந்தை சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை திருடி வந்து செல்போன் வாங்கியது தெரியவந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட தந்தை  அவருடன் சண்டை போட்டு ஊருக்கு திரும்பி வர அழைத்ததால் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.