#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் சொல்லும் லாட்ஜுக்கு வா.. நீ கேட்டதை தருகிறேன்.! லாட்ஜுக்கு சென்ற நபருக்கு காத்திருந்த கும்மாங்குத்து.!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய தொலைப்பேசி எண்ணுக்கு சில தினங்களுக்கு பெண் ஒருவர் தவறுதலாக போன் செய்து பேசியுள்ளார். ஆனால் அது ராங் கால் என தெரிந்தவுடன் அப்பெண், சாரி சார்.. மாத்தி பண்ணிவிட்டேன் என்று தொலைப்பேசியை வைத்துள்ளார். இருப்பினும், ரமேஷ் அந்த பெண்ணின் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தொடர்ந்து மகேஷ் அடிக்கடி பண்ணும் போனை நிராகரித்துள்ளார். ஆனாலும் மகேஷ் அப்பெண்ணை விடாமல், தெடர்ந்து போன் செய்து உன்னுடைய குரல் அழகாக இருக்கிறது என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி அப்பெண்ணை எப்படியாவது தன் பக்கம் கவர்ந்து விடலாம் என எண்ணி பயங்கர பில்டப் கொடுத்து பேசியுள்ளார். ஆனாலும் அப்பெண் நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து ஒரு கட்டத்தில், அந்த பெண்ணிடம் நீ ஒரே ஒரு முறை முத்தம் மட்டும் கொடு, நான் பின்னர் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணும் சரி என கூறி, நீங்கள் நான் சொல்லும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்த மகேஷ் அந்த பெண் வரச்சொன்ன இடத்திற்கு செல்வதற்கு தயாரானார்.
அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்ற மகேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் வரச்சொன்ன ஒரு லாட்ஜில் அந்த பெண்ணின் அண்ணன், உள்ளூர் ரவுடிகள் 5 பேருடன் காத்திருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஆசையுடன் வந்த மகேஷை அடித்து துவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.