35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
28 வயதில் 8 ஆண்களுடன் திருமணம்..! கடைசி கணவரை பாதி வழியில் தவிக்கவிட்டு சென்றபோது நிகழ்ந்த சம்பவம்.!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் என்ற 28 வயது நிரம்பிய பெண் வசதிபடைத்த ஆண்களை குறிவைத்து அவர்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை அபேஸ் செய்துவிட்டு தலைமறைவாவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்தநிலையில், தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அவர் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த நபர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்துள்ளார்.
அந்த சமயத்தில் மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஊர்மிளா இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன படேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில் போலீசார் ஊர்மிளாவை மடக்கி பிடித்துக் கைது செய்தனர். மேலும், ஊர்மிளாவுக்கு உதவிய மூன்று நபர்களையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஊர்மிளா இதற்க்கு முன்பு ஏழு ஆண்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.