கொரோனா வைரஸின் தாக்கம்... 3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறாத இளம்பெண்... பொறுமை இழந்து கணவர் செய்த அதிரடி செயல்!!



Young women Three years house hold because of corona fear

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மாஜி - முன்முன் மாஜி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் கோர தாண்டவம் ஆடியதை அடுத்து அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டது. இதனால் மக்கள் சிறிது  காலம் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்தனர். 

அந்த சமயத்தில் அரசின் வழிகாட்டல் படி முன்முன் வீட்டை விட்டு வெளியேறாமலும் வீட்டிற்குள் யாரையும் விடாமல் இருந்து வந்தார். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் முன்முன் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து வந்துள்ளார். முன்முனின் கணவர் எத்தனை முறை எடுத்து சொல்லியும் முன்முன் கேட்காமல் வீட்டில் மகனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

corona fear

இதை விட என்ன கொடுமை என்றால் முன்முன் கணவரை கூட வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் சுஜன் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் வாடகை இருந்து கொண்டு மனைவி மற்றும் மகனுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தும் வீடியோ காலில் இருவருடன் பேசியும் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஜின் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் சுஜின் வீட்டை தட்டியும் முன்முன் வீட்டை திறக்காமல் இருந்து வந்துள்ளார். வேறு வழியின்றி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று முன்முன் மற்றும் அவரது மகனை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். தற்போது முன்முனுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.