மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. சமோசாவால் பறி போன உயிர்! தீக்குளித்த இளைஞர்! என்னதான் நடந்தது? வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!!
மத்திய பிரதேச மாநிலத்தில், சமோசாவுக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், அனுப்புர் மாவட்டம் அமர்கன்டக் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் அமைந்துள்ள சமோசா கடை ஒன்றில் இரு சமோசாவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சமோசாவிற்கு 20 ரூபாய் தரும்படி கடைக்காரர் அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த இளைஞர் ஏன் திடீரென சமோசாவின் விலையை அதிகரித்தீர்கள். நான் 15 ரூபாய்தான் தருவேன் எனக் கூறி கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடைக்காரர் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடிந்த சில மணி நேரங்களில் அந்த இளைஞர் மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.