யூடியூப் மூலமாக இந்திய அரசுக்கு ரூ.6,800 கோடி வருவாய்.. 6 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.!



YouTube Revenue to India Govt GDP Rs 6800 Crore

யூடியூபில் வீடியோ பதிவு செய்து பணம் சம்பாதிக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யூடியூப் வருமானம் மூலமாக சிறுபடைப்பாளிகள் முதல் பெருநிறுவனங்கள் வரை பயனடைகின்றன. இதனால் பல வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், யூடியூப் படைப்பாளிகளின் மூலமாக இந்திய பொருளாதாரத்திற்கு நற்பலன் கிடைப்பதாகவும், கடந்த 2020 ஆம் வருடத்தில் ரூ.6,800 கோடி வருவாய் மத்திய அரசுக்கு வந்துளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஆக்ஸ்போர்ட் எக்கனாமிக்ஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

Youtube

அந்த தகவலில், "இந்திய நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடத்தில், யூடியூப் படைப்பாளிகள் வாயிலாக இந்திய ஜி.டி.பி-க்கு ரூ.6,800 கோடி பங்களிப்பு வந்துள்ளது. சுமார் 6 இலட்சத்து 83 ஆயிரத்து 900 பேருக்கு முழுநேர வேலை கிடைத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.