21 சிறுவர்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த எழுத்தாளர்! மாணவர்கள் பரபரப்பு புகார்



21-boys-sexually-assaulted-by-a-journalist

கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் பத்திரிக்கையில் எழுத்தாளராக பணியாற்றி வரும் அந்த நபர் கிட்டத்தட்ட 21 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் சந்திரா ஹெம்மடி (40). ஒரு தனியார் பத்திரிக்கையில் செய்தியாளராக பணியாற்றி வரும் இவர் பள்ளிகளில் பகுதி நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இசை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் உடுப்பியை சுற்றி உள்ள கிராம பள்ளிகளுக்கு இவர் இசை பயிற்சி கொடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்த இவர் அவர்களது அன்பையும், நம்பிக்கையையும் பெற்றுவிடுவார்.

பின்னர் தன்னுடைய பத்திரிகைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி, தன்னுடன் துணைக்கு வருமாறு ஒவ்வொரு முறையும் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு அடர்த்தியான காட்டு பகுதிகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சென்றுவிடுவார். அவ்வாறு அழைத்துச் செல்லும் மாணவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த கொடுமையை பற்றி இத்தனை நாட்களாக யாரும் வெளியில் சொல்லவில்லை.

karnataka journalist

இந்நிலையில் கடந்த மாதம் Byndoor பகுதியில் உள்ள ஒரு மாணவரை அவரது பெற்றோர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை அறிவித்தனர். அதன்பின்பு அந்த மாணவனிடம் விசாரணை செய்ததில் எழுத்தாளர் சந்திராவின் கொடுமைகள் வெளியில் வர ஆரம்பித்தன. அதன்பேரில் அந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து உடுப்பி காவல்துறையினர் எழுத்தாளர் சந்திராவை கடந்த மாதம் 27 ஆம் தேதி அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை பற்றி அந்த பகுதிகளில் பரவ துவங்கியதும் கடந்த 5 வருடங்களாக அந்த எழுத்தாளரிடம் சிக்கி பாதிப்புக்குள்ளான மேலும் 20 சிறுவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் சந்திராவைப் பற்றி புகார் அளித்துள்ளனர்.

இதுவரை அவர்மேல் 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதோடு மட்டுமல்லாமல் இன்னும் பலபேர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு புகார் அளிக்காமல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சந்திராவை உடுப்பி மாவட்ட நீதிபதியின் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் டிசம்பர் 17ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.