53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உடல் எடையை குறைக்க வேண்டுமா.? உடனே இதை செய்து சாப்பிடுங்கள்.!
இந்த அடை தோசை செய்வது மிகவும் சுலபமான காரியம் தான் அதை எப்படி செய்வது என்பது பற்றி தற்போது நான் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் - 1/4 மூடி
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -5
உளுந்து - 1 டீஸ்பூன்
பச்சரிசி -1/4 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1 கப்
செய்முறை :
உளுந்து பச்சரிசி துவரம் பருப்பு கடலைப்பருப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அவற்றோடு உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போன்றவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மேலும் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த மாவுடன் நறுக்கிய தேங்காய் வெங்காயம் பொடி பொடியாக நறுக்கப்பட்ட கருவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். தற்போது அந்த மாவை தோசை கல்லில் ஊற்றிக் கொள்ளவும். சற்று நேரம் சென்ற பிறகு எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சுவை மிக்க அடைக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும் .