35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
"வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவரா நீங்கள்!" இந்தப் பதிவு உங்களுக்குத்தான்!
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது வைட்டமின் டி. சூரிய ஒளியில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. வைட்டமின் டி தான் உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுகிறது. எனவே இது எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
வைட்டமின் டி குறைபாடு தான் மூட்டுவலிப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் மாத்திரைகள் இப்போது ஏராளமாக புழக்கத்தில் உள்ளன. ஆனால் அந்த மாத்திரைகளை அதிகப்படியாக எடுத்துக்கொள்வதும் ஆபத்து தான்.
அதிகப்படியான வைட்டமின் டியினால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். மூளையின் செயல்பாடு பாதிக்கும். மனச்சோர்வு, குழப்பம் ஆகியவை ஏற்படும். இதனால் அதிகப்படியான கால்சியம் உடலில் குவிவதால் குமட்டல், வாந்தி, பலவீனம் ஆகியவை ஏற்படும்.
எனவே ஒரு நாளைக்கு 15 mcg அல்லது 600 IU வைட்டமின் டி உட்கொண்டாலே போதுமானது. உடலில் சூரிய ஒளி படுதல் மற்றும் போதுமான அளவு வைட்டமின் டி உட்கொள்ளத் தேவையான உணவுப் பழக்கங்களுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.