#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"குப்பையில் போடும் வாழைக்காய் தோலை வைத்து இதை பண்ணுங்க" அசத்தல் டிப்ஸ்..
பெரும்பாலானவர்கள் வீடுகளில் சமைக்கும் ஒரு காய் வகை தான் வாழைக்காய். இந்த வாழைக்காயை பஜ்ஜி, பொரியல், பொடிமாஸ், வாழைக்காய் மசாலா, வாழைக்காய் வறுவல் என்று பல்வேறு முறைகளில் விதம் விதமாக சமைத்து சாப்பிடலாம் என்று நாம் அறிந்ததே.
ஆனால் நம்மில் பலரும் வாழைக்காயை மட்டும் சமைத்து உண்டு விட்டு, அதன் தோலை குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் உண்மையிலேயே, வாழைக்காயை விடவும் அதன் தோலில் தான் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வாழைக்காயின் தோலை கொண்டு எப்படி பொரியல் செய்வது என்று பார்ப்போம். வாழைக்காய் தோலை பொடியாக நறுக்கி, மஞ்சள் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை வடித்து, கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளித்து, பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், வாழைக்காய் தோல் ஆகியவற்றை சேர்த்து கிளறி, பின் தேங்காய் துருவல், கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் வாழைத்தோல் பொரியல் ரெடி.