மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த கருப்பு கேரட் தெரியுமா?!"
ஆரஞ்சு நிறத்தில் உள்ள கேரட்டை தான் பெரும்பாலும் நாம் பார்த்துள்ளோம். கேரட்டில் உள்ள அரிய வகை தான் கருப்பு கேரட். மேலும் கேரட்டில் ஆரஞ்சு மட்டுமல்லாது சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன.
கேரட் கண் பார்வையை மேம்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. தினமும் கருப்பு கேரட் ஜுஸை குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாகும். தொடர்ந்து பச்சையாக கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
கருப்பு கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், பசி ஏற்படாது. மேலும் தினசரி கேரட் உட்கொண்டு வந்தால், இதய பிரச்சைனைகள் வராமல் தடுக்கலாம். மேலும் கேரட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் பற்கள் உறுதியாக மாறுவதோடு, அழுக்குகளும் வெளியேறுகிறது.
கேரட் சாப்பிடுவதால் வாயில் உமிழ்நீர் அதிகம் சுரக்கிறது. உமிழ்நீர் அதிகம் சுரந்தால், பாக்டீரியா தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் தினசரி கேரட் உண்பது நோயெதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துகிறது. பிற நிறங்களை விட கருப்பு நிற கேரட்டில் இந்தப் பண்புகள் நிறைந்துள்ளன.