மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா.? இத ட்ரை பண்ணுங்க.!
உடலில் நீர் சத்து குறைபாட்டை தணிப்பதில் முதல் இடம் வகிப்பது இளநீர். இது வெறும் தாகத்திற்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான நீர் சத்தையும் கொடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. அதன்படி இளநீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
பொதுவாக இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், நார்சத்து, நீர் சத்து இரும்பு சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடைகாலங்களில் இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
தினமும் இளநீர் குடிப்பதால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாகும். குறிப்பாக இளநீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும். இதனால் தோல் வறட்சியைப் போக்கி முகப்பரு மற்றும் கொப்புளங்கள் வராமல் தடுக்கிறது.
வெயில் காலங்களில் உடல் வறட்சியால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் இளநீர் குடிப்பதால் குணமாகும். மேலும் இளநீரில் உள்ள லாரிக் அமிலம் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கிறது. இதன் மூலம் நமது உடலை இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.
மேலும் தினமும் இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலமாக எளிதாக வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்துகிறது.