#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
21 நாட்கள் தொடர்ந்து காலையில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு பாருங்க.!?
பொதுவாக பழங்கள் சாப்பிட்டாலே மிகவும் ஊட்டச்சத்து என்று பலரும் கூறுவதை நான் கேள்விப்பட்டிருப்போம். பழங்களில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக விலை மலிவாகவும், அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழம் தான் வாழைப்பழம். இதில் பல வகைகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக செவ்வாழைப்பழத்தில் நமக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று நம் முன்னோர்களும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். செவ்வாழையில் இரும்பு சத்து, நார்ச்சத்து வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
செவ்வாழைப்பழத்தை 100 கிராம் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் பிரச்சனை, கண் எரிச்சல், கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
குறிப்பாக செவ்வாழைப்பழத்தை காலை நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். இது செரிமானமாக சற்று கடினமாக இருக்கும் என்பதாலும், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தினாலும், காலை நேரத்தில் சாப்பிட்டாலும் எளிதாக செரிமானம் நடைபெறுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல வகையான நோய்களும் உடலில் இருந்து ஓடிவிடும்.