மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முளை கட்டிய பயிரை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?
நவீன மயமான உலகில் வாழும் நாம் இன்று ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல் பாஸ்ட் புட் உணவுகளையே அதிகம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் இன்றி வாழ்ந்து வருகிறோம். நமது உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுவூட்ட தினமும் வெறும் வயிற்றில் முளைக்கட்டிய பயிரு வகைகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
தினமும் முளைக்கட்டிய பயிரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உடலில் ஏற்படுகின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முளை கட்டிய தானியங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
2. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் முளை கட்டிய பயிரை உட்கொள்வதும் நன்மை தரும்.
3. பயரில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
4. முளை கட்டிய பயிரை உட்கொள்வதால் அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
5. உடல் எடையைக் குறைக்க முளை கட்டிய பயிரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
6. முளை கட்டிய பயரில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இது எடையைக் குறைக்க உதவும்.