கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தினசரி பெண்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. பெண்களே தெரிஞ்சிக்கோங்க..!
நம் ஊர் கடைகளில் வாழைப்பழம் இல்லாத கடைகளை விறல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில் வாழைப்பழம் தன்னகத்தே பல நன்மைகளை கொண்டது ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஒவ்வொருவரும் சாப்பிடவேண்டியவை வாழைப்பழம் ஆகும்.
பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிம சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், நார்சத்து, இரும்புசத்து கிடைக்கும்.
வாழைப்பழத்தில் இருக்கும் நார்சத்து உடலின் எடையை குறைக்க உதவும். பசி உணர்வை கட்டுக்குள் வைக்கும். இரத்த சர்க்கரை அளவு சீராகும். பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.
மாதவிடாய் நாட்களிலில் ஏற்படும் உடற்சோர்வு கட்டுப்படுத்தப்படும். புத்துணர்ச்சி கிடைக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் சரும நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம், தோல் வறட்சி சரியாகும்.
பொட்டாசியம் உரோம வளர்ச்சியை அதிகரிக்கும். குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. குடற்புண், வாய்ப்புண், வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னையும் ஏற்படாது. உடலில் இரத்த ஓட்டமானது சீராக செல்ல பேருதவி செய்கிறது.