#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கருஞ்சீரகத்தால் உடலுக்கு ஏற்படும் அசத்தல் நன்மைகள் இதோ.. ஆனால் இவர்கள் தவிர்க்க வேண்டும்..!
சித்த மருத்துவத்தில் கருஞ்சீரகம் மிகப்பழமையானது ஆகும். கருஞ்சீரகத்தின் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஈ, பி, லினோலெயிக் போன்றவை உள்ளன. இதனுள் இருக்கும் தைமோகுயினோன் தாவர வேதிப்பொருள் ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்.
இவை உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை நீக்கவும், உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும் உதவி செய்கிறது. புற்றுநோய் செல்கள் இருந்தால், அவற்றின் வளர்ச்சியை தடுக்கும்.
கருஞ்சீரக விதை எண்ணெய் கொழுப்புகளை குறைக்க உதவி செய்யும். இதனால் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். டைப் 2 நோயாளிகளுக்கு மருந்தாக அமைகிறது. தைராயிடு இருப்போருக்கு அருமருந்தாக செயல்படுகிறது. தினமும் கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மாதவிடாய் தன்மை தூண்டப்படும்.
Note: கருஞ்சீரக விதையை கர்ப்பிணி பெண்கள், இரத்த அழுத்த மருந்து எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. பிறர் இதனை அளவோடு சாப்பிடுவதே நல்லது.