வெயில்காலத்துல வெந்நீரில் குளிப்பிங்களா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!! 



benefits-of-taking-bath-in-hot-water-MKBV98

வெயில்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

நமது முன்னோர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நம்மை பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் குளிர்காலத்தில் பலரும் வெந்நீரில் குளிப்பதையே விரும்புகின்றனர். தற்போதைய புதிய ஆய்வில் வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிப்பது நல்லது என்று தெரியவந்துள்ளது. 

வெந்நீரில் குளிப்பதால் தசைபிடிப்பதால் அவதிப்படுவோருக்கு ரிலாக்சை கொடுக்கிறது. வெயிலில் சுற்றிவிட்டு உடனடியாக ஏசி அறைக்குள் செல்லும்போது உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்படுவதால் இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெந்நீரில் குளிக்கும்போது இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும்.

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

மன அழுத்தத்தை போக்கும் :

கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதன் காரணமாக இரவு, பகல் என்று பாராமல் அதிகமாக ஏசியை பயன்படுத்துகிறோம். ஏசி அறையை விட்டு வெளியேறுவதற்கே யோசிக்கிறோம். இதன் காரணமாக உடனடியாக அதிக வெப்பநிலைக்குள் செல்வதன் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒரு விதமான அழுத்தம் மற்றும் அசௌகரியமும் ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பது மன அழுத்தத்தை குறைத்து, நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

benefits

சருமத்தை சுத்திகரிக்கும் :

வெயில் காலங்களில் சூடான நீரில் குளிப்பதன் மூலம் சரும துவாரங்களில் இருந்து சருமத்தில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது.

தசை பிடிப்பு நீங்கும் :

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வேலைதான் முக்கியம் என்று ஓடி வருவதால், தசைபிடிப்பு ஏற்படுகிறது. விளையாடுவது மற்றும் தவறான முறையில் அமர்வது இதனாலும் ஏற்படுகிறது. இதனால் வலி அதிகமாகும் போது மருத்துவரை அணுகுவது சிறந்தது. விளையாட்டில் கவனம் செலுத்துபவராக இருந்தால் வெந்நீரில் குளிப்பது வலியை நீக்கி தசைகளை தளர்த்தவும், வளைக்கவும் உதவுகிறது.

ஒற்றைத் தலைவலிக்கு சிறந்தது :

ஒற்றை தலைவலி அதிகமாக யாருக்கும் வராவிட்டாலும், எப்போதாவது வருவது மிகுந்த அசௌகரியத்தை உருவாக்கும். இதனால் சூடான தண்ணீரில் குளிப்பதனால் நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை உடனடியாக குறைக்க சிறந்தது.

மாதவிடாய் வலியை குறைக்க உதவும் :

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை சூடான தண்ணீரில் குளிப்பதன் மூலம் குறைக்க இயலும். இது நரம்பு அழற்சியையும் குறைக்கும்.