"மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்கிறீர்களா" உங்களுக்காக தான் இந்த தகவல்..



Benefits of walking at evening

நடைப்பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதில் காலை நேர நடைபயிற்சி மாலை நேர நடைபயிற்சி என்று இரண்டு வகைகள் இருந்து இருக்கின்றன.

walking

பெரும்பாலும் காலை நேர நடை பயிற்சிகள் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மாலை நேர நடை பயிற்சியில் கிடைக்கும் நன்மைகளை குறித்து இப்போ பார்க்கலாம் வாங்க.

மாலைநேர நடைபயிற்சியில் தூக்கத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்த உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தினால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது.

walking

இரவு உணவிற்கு பின்பு நடப்பதால் செரிமானத்தை சீராக்குகிறது. மேலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இது எலும்புகளை வலுப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.