திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே... அழகிற்காக அணியும் வெள்ளி கொலுசில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
இந்தியா பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஒரு நாடாகும். நம் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஆபரணங்களிலும் ஐதீகம் மற்றும் மருத்துவ நன்மைகள் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு தங்க ஆபரணங்களையே அணிவிப்பார்கள். ஆனால் கால்களில் அணியும் கொலுசுக்கு மட்டும் வெள்ளியை பயன்படுத்துவார்கள். இதற்குப் பின்னால் ஐதீகங்களையும் தாண்டி மருத்துவ நன்மைகள் இருப்பதாக சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் கால்களில் வெள்ளி கொலுசு அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். வெள்ளி கொலுசு அணிவது பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு அவர்களின் எலும்புகளையும் உறுதியடைய செய்கிறது. கால்களில் வெள்ளி கொலுசை அணியும் போது அதன் உலோகம் தோல் வழியாக ஊடுருவி சென்று எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மேலும் பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதால் அவர்களுக்கு ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக வெள்ளி கொலுசு அணியும் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனை சரி செய்யப்படுவதோடு கர்ப்பப்பை ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் வெள்ளி கொலுசு அணிவது கால் வலியை போக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதால் கிடைக்கும் முக்கியமான நன்மைகளில் ஒன்று உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியை தருவதாகும். வெள்ளி குளிர்ச்சியான உலோகமாகும். இதனைப் பெண்கள் அணியும் போது அவர்களது உடல் உஷ்ணம் கட்டுப்படுத்தப்பட்டு உடல் குளிர்ச்சி அடைகிறது. இதுபோன்று ஏராளமான நன்மைகள் கிடைப்பதால் தான் பண்டைய காலத்தில் இருந்தே பெண்கள் கால்களில் வெள்ளி கொலுசு அணிய பழக்க படுத்தப்பட்டுள்ளனர்.