மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாகற்காயில் சாம்பார் செய்யலாமா! எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க!"
பொதுவாகவே பாகற்காய் பலருக்கும் பிடிக்காது. அதற்கு காரணம் அதன் கசப்பு சுவை. ஆனால் இத்தகைய கசப்பு சுவை கொண்ட பாகற்காயில் தான் ஏராளமான நோய்களை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. நம் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்க பாகற்காய் உதவும்.
நம் உடலில் இந்த யூரிக் அமிலம் அதிகமானால் அது படிக வடிவில் நம் மூட்டுகளில் படிந்து, பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே பாகற்காய் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இந்தப் பாகற்காய் சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
முதலில் பாகற்காய் சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.
அதில் பாகற்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். அதன்பின்னர் வேகவைத்த துவரம்பருப்புடன் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் பாகற்காய் சாம்பார் ரெடி.