பெண்களுக்கு பிரசவத்துக்கு பின் மார்பகம் தளர்வது எதனால்? தவிர்க்க வழி இதோ.!



breast sagging causes tamil

பிரசவத்திற்கு பின்னர் தாய்மார்களுக்கு இயல்பாகவே மார்பகங்கள் தளர்வடையும். இது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் ஏற்படும். அதைப்போல உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயது காரணமாகவும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உள்ளாடை உதவி செய்தாலும், அது சவுர்கரியமாக இருக்கும். இனி மார்பகங்கள் தளர்வது குறித்த தகவலை காணலாம். 

தளர்ச்சிக்கான காரணம் :

வயதாகும் சமயத்தில் மார்பகத்தை தாங்கும் தசையில் பலவீனம் ஏற்பட்டு மார்பகம் தளர்வடைகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் மார்பகத்தில் பால் சுரக்கும். இதனால் மார்பகம் பெரிதாகி பின் நாட்களில் பால் கொடுப்பதை நிறுத்தியதும், மார்பகங்கள் தலைவடைகிறது. 

உடல் எடையை குறைக்கும் போதும், கர்ப்பத்திற்கு பின்னரும் ஏற்படும் அளவு மாறுபாடு போன்றவற்றால் மார்பக சரும தசைகள் தளர்வடைகின்றன. 

Breast Sagging

தவிர்க்கும் வழிமுறை :

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பெண்கள் மாதம் 2 1/2 கிலோ வரை நிதானமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். அதேபோல ஒரே நேரத்தில் உடலுக்கு பலத்தை கொடுத்து ஐந்து கிலோவுக்கு மேல் குறைத்தால், மார்பகம் தளர்ச்சியடையும். 

புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கும் மார்பகம் தளர்வடையும். இதனால் புற்றுநோய் அபாயமும் அதிகரிக்கிறது. அதனைப் போல சரியான அளவுள்ள பிராவை அணையாதது, இரவு நேரத்தில் பிரா அணிந்து உறங்குவதை தவிர்ப்பதும் மார்பக தளர்ச்சியை தவிர்க்க உதவும்.