கட்டிடத்தில் இருந்து கால் நழுவியது..! 5 அடி நீள எஃகு கம்பி ஆசன வாய் வழியாக உள்ளே நுழைந்தது..! பதறவைக்கும் சம்பவம்..!



builder-gets-metal-rod-stuck-up-his-bum-after-slipping

19 வயதான நபர் ஒருவர் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள கட்டிடத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்ததில் 5 அடி எஃகு கம்பி அவரது ஆசனவாய் மூலம் உடலுக்குள் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 7 ம் தேதி தீராவத் சோய்கு என்ற 19 வயது நபர் ஒருவர் கட்டிடத்தின் மேற்கூரையில் வேலைபார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்த நிலையில் மிகவும் மோசமான சூழலில் தீராவத் சோய்கு மேற்கூரையில் நின்று வேலை பார்த்துள்ளார்.

accident

அப்போது அவர் தவறுதலாக அங்கிருந்த பழைய கூரை ஓடுகளில் கால் வைத்தபோது கூரை உடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது தரையில் இருந்த 5 அடி நீள உலோகக் கம்பி நேராக அவரது ஆசனவாய் மூலம் உடலுக்குள் சென்றுள்ளது.

வலியால் துடித்த தீராவத் சோய்கு சிறிது நேரத்தில் மயங்கியநிலையில் அங்கிருந்த சக ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கும், ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்த 1.9 அடி நீள கம்பியை வெட்டி எடுத்தனர்.

accident

அதன்பின்னர் தீராவத் சோய்கு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த கம்பியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். இந்த எதிர்பார்த்த விபத்தில் தீராவத் சோய்குவின் மலக்குடல் முற்றிலும் சேதமடைந்தநிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்து மருத்துவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

விபத்து குறித்து பேசிய தீராவத் சோய்குவின் நண்பர் ஒருவர் கூறுகையில், கம்பி தனது நண்பனின் ஆசனவாய் வழியே உள்நுழைந்தபோது அவன் கதறிய சத்தம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்ததாகவும், மழை பெய்யும் போதும், காற்று வீசும்போதும் கட்டிடங்கள் மீது இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நண்பன் தீராவத் சோய்குவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவன் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் கூறியுள்ளார்.

accident