மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#SundaySpecial: வீட்டிலேயே சுவையான முட்டைகோஸ் அல்வா செய்துகொடுத்து அசத்துங்கள்.!
வார இறுதி விடுமுறை நாளான இன்று, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் சுவையான முட்டைகோஸ் அல்வா செய்துகொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 0.5 கிலோ,
நெய் - 1/4 கிண்ணம்,
கொழுப்பு நீக்காத பால் - 2 கிண்ணம்,
சர்க்கரை - 1/2 கிண்ணம்,
ஏலக்காய் பொடி - 1/2 கரண்டி,
பாதாம் மற்றும் முந்திரி - 1 சிறிய கரண்டியளவு.
செய்முறை:
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும், பொடிப்பொடியாக நறுக்கிக்கொண்ட முட்டைகோஸை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
முட்டைகோஸ் நன்கு வதங்கியதும், அதனுடன் பாலை சேர்த்து வேகவைக்க வேண்டும். பால் பாதியளவு சுண்டியதும் சர்க்கரை மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கிளற வேண்டும்.
இந்த கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் அடுப்பை வைத்து கிளற வேண்டும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்ந்து கிளறிவிட்டு, அல்வா பதத்திற்கு வந்ததும் பாதாம் மற்றும் முந்திரியை தூவி இறக்க வேண்டும்.