என்னது ஜிமெயிலில் இமோஜி பயன்படுத்தலாமா..? ஷாக் கொடுத்த ஜிமெயில்.. எதிர்பாராத புதிய அப்டேட்..!



Can i use emoji in my gmail..? Shocked Gmail.. Unexpected new update..!


நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் வாட்ஸ் அப், மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற  செயலிகளில் ஒருவர் நமக்கு அனுப்பும் குறுந்தகவலுக்கு இமோஜிகள் மூலம் ரிப்ளை செய்வது வழக்கமாகிவிட்டது. ஒரு குறுந்தகவலுக்கு முழுமையாக ரிப்ளை டைப் செய்யாமல் இமோஜிகள் ரியாக்க்ஷன் மூலம் ரிப்ளை செய்வதையே பெரும்பாலானோர் விரும்புகின்றோம்.

ஆனால் ஜிமெயிலில் இமோஜிகள் பயன்படுத்தி பதில் அனுப்பும் வசதி இல்லாமல் இருந்தது. இப்போது ஜிமெயில் அதனுடைய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் இனி பிற செயலிகள் போல ஜிமெயிலில்லும் ரிப்ளை செய்வதற்கு முழுமையாக டைப் செய்யாமல் இமோஜி  ரியாக்க்ஷன் பயன்படுத்தி பதில் அனுப்பலாம்.

மேலும் ஒருவருக்கு ரிப்ளை செய்யும் போது கீழே உள்ள + சிம்பில் அழுத்தினால் இமோஜிகள் வரிசையை காண முடியும். அதில் நமக்கு விருப்பமான இமோஜிகளை தேர்வு செய்து அனுப்பலாம். ஒரு ரிப்ளை மெசேஜில் 50 இமோஜிகள் வரை அனுப்பலாம் என சொல்லப்படுகிறது.

அதன்படி முதல்கட்டமாக குறிப்பிட்ட இமோஜிளை சில ஆண்ட்ராய்டு பயன்பாட்டார்கள் மட்டுமே உபயோகிக்க சோதனை அடிப்படையில் வழங்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.