கோழிக்கறியை விரும்பி உண்பவரா நீங்கள்? உந்த உண்மை தெரிந்தால் இனி சற்று யோசிப்பீர்கள்..



Chicken and its health problem in tamil

ஆண்மை குறைபாடு, குழந்தையின்மை என்பது தற்சமயம் மக்களிடையே பெருவாரியாக காணப்படும் ஒரு வியாதியாக மாறி ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. முன்பெல்லாம் நம் முன்னோர்களுக்கு 5  முதல் 10  குழந்தைகள் வரை பெற்று வளர்த்து வந்தனர். ஆனால் தற்போதுள்ள சமூகத்தில் ஒரு குழந்தை பெற்றெடுப்பது என்பதே மிகவும் சவாலாக உள்ளது.

இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுகளும், நமது வாழ்க்கை முறையும்தான்.

chicken

ஆண்மைக் குறைவு:

ஃபாஸ்ட் புட், பிராய்லர் சிக்கன் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஆண்மை குறைவு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.  இளைஞர்கள் முதல் குடும்பமாக வெளியில் செல்பவர்களும் அதிகமாக விரும்பி உண்ணும் உணவில் இந்த ப்ராய்லர் எனப்படும் கரி கோழி தான் முதல் இடத்தில் உள்ளது.

சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறிக்கோழிகள் மிகவும் ஆபத்தானவை. விதவிதமாக சமைத்து தரப்படும் இந்த உணவுகளை சாப்பிட யாருக்குத்தான் ஆசை வராது. ஆனால் இந்த கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் யாருக்கும் எவ்வித அச்சமும் இல்லை.

chicken

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அசட்டையாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என  நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

பொதுவாக வெள்ளை உணவுப்பொருள்கள் விஷம் என்றும் அவை எவையெவை என்று பட்டியலிடவும் செய்திருக்கிறார்கள். வெள்ளை வெளேர் என்றிருக்கும் தீட்டிய அரிசி, சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை, மைதாமாவு போன்றவற்றின் வரிசையில் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கன் கோழிகளும் அடக்கம்.

அழுக்கு நிறத்தில் காணப்படும் கருப்பட்டியைவிட வெள்ளை வெளேர் என ஜொலிஜொலிக்கும் சர்க்கரை சாப்பிட ருசியாக இருக்கும்; ஆனால் அது ஆபத்தானது என்பது தெரிந்தும் சுவைக்கிறோம். அப்படித்தான் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கனும்!