#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை: பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவியின் முன் அதை செய்த ஊழியர்! நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவி ஒருவர் கல்லூரி பணியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். சென்னையில் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் காட்டாங்குளத்தூர். இங்கு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவியர் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்த ஊழியர் மீது இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கல்லூரி மற்றும் காவல்துறையினரை எதிர்த்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட அந்த மாணவி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு தானியங்கி இயந்திரத்தில் தரை தளத்தில் இருந்து ஆறாவது மாடிக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில் தானியங்கி இயந்திரத்திற்குள் வந்த பல்கலைக்கழக ஊழியர் கட்டிடத்தின் மேல் தளத்திற்கு செல்வதற்காக பட்டனை அழுத்தி உள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவர் மட்டுமே அந்த தானியங்கி இயந்திரத்திற்குள் இருந்துள்ளனர்.
அந்த தானியங்கி இயந்திரம் மேல் நோக்கி நகர தொடங்கியதுமே அந்த ஊழியர் தன்னுடைய ஆடைகளை களைய ஆரம்பித்து அந்த பெண்ணின் முன்பே சுய இன்பம் செய்துள்ளார். மேலும் தனியாக இருந்த அந்த மாணவியின் உடைகளையும் களைவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் மாணவி கத்தி கூச்சலிட்டதையும் பொருட்படுத்தாத அந்த ஊழியர் ஆறாவது மாடிக்கு செல்லும் வரை மாணவியின் உடையை களைவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவி விடாமல் போராடவே ஆறாவது மாடிக்கு வந்த உடன் மாணவியை வெளியே தள்ளிவிட்டு அந்த ஊழியர் மேல் நோக்கி சென்று விட்டார்.
இது குறித்து அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அந்த ஊழியரின் தவறான நடத்தை குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அந்த ஊழியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று நள்ளிரவு முதலே மாணவ மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து தங்களிடம் சிசிடிவி கேமரா பதிவுகள் இருப்பதாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
— zindahi (@zindahi) November 22, 2018