"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
வடித்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
மனிதர்களின் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிப்பது அரிசி சாதம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் அரிசி சாதம் முக்கிய உணவாக உள்ளது. அரிசி சாதம் இரவில் மீதமானால் தண்ணீர் ஊற்றி காலையில் பழைய சோறாக சாப்பிடும் பழக்கம் பல இடங்களில் உண்டு.
ஆனால் சிலர் வடித்த அரிசி சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர். அதன்படி, அரிசி சாதத்தை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக அரிசி சாதத்தை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட்டால் விஷமாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அரிசி சாதம் மற்ற உணவுகளை போல் இல்லாமல் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா உள்ளது. இது சாதத்தை மீண்டும் சூடு படுத்தும்போது இந்த பாக்டீரியா விஷத்தன்மை உடையதாக மாறுகிறது.
அதனால்தான் சமைத்த சாதத்தில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க அறை வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் சூடான சாதத்தை சமைத்த சில மணி நேரங்களில் சாப்பிடுவது உடல்நலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.