நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கிரிஸ்பி மிளகாய் சிக்கன்.! டேஸ்டியான ரெசிபி.!



crispy-and-tasty-chilly-chicken-recipe

சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. எத்தனையோ சிக்கன் சாப்பிட்டு இருப்போம் ஆனால்  இந்த மிளகாய் சிக்கன் ரெசிபி சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.

chilly chicken receipe
தேவையான பொருட்கள்: 1 கிலோ சிக்கன், 4 காய்ந்த மிளகாய், 2 பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டீஸ்பூன் மஞ்சள், பூண்டு விழுது, 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2  எலுமிச்சை பழம், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

chilly chicken receipeசெய்முறை: முதலில் பச்சை மிளகாயையும் காய்ந்த மிளகாயையும் தனித்தனியே இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதோடு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள், எடுத்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் ஊற வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைத்து சிக்கனை போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பிறகு எடுத்தால் மொறு மொறுப்பான காரமான க்ரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார்.