#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாம் உணவிலிருந்து ஒதுக்கும் கறிவேப்பிலையில் எவ்வளவு நன்மைகள் இருக்குன்னு தெரியுமா?!
பொதுவாக கருவேப்பிலையை நாம் அனைவரும் உணவில் நறுமணத்திற்காக சேர்க்கிறோம். ஆனால் நாம் யாரும் அதை உண்ணாமல் ஒதுக்கி வைத்துவிடுவோம். ஆனால் வெறும் வயிற்றில் பச்சையாக கருவேப்பிலை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன.
காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான இடுப்பைப் பெறலாம். மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு பேரீச்சம்பழத்துடன் சிறிது கருவேப்பிலையை உட்கொண்டால் ரத்த சோகை நீங்கும்.
மேலும் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து பாதுகாக்கும். செரிமானப் பிரச்னையைத் தீர்க்கும். மேலும் தலை முடி நன்கு அர்த்தமாக கருமையாக வளர உதவும்.
ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியுடன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறிவிடும். மேலும் கல்லீரலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் ஈ, பி,பி2, சி, மற்றும் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை வளமாக நிறைந்துள்ளன.