விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
தயிர் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?.. மிஞ்சிப்போன இடியாப்பத்தை இப்படி செய்து பாருங்கள்; அசத்தல் டிப்ஸ்.!
நமது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் பாதுகாப்பதற்காக பல வழிமுறைகள் இருக்கின்றன.
ஆசையாக சாப்பிட வாங்கி வைக்கும் முட்டையை கூம்பு பகுதி மேல் இருப்பது போல வைத்தால் விரைவில் அது கெடாமல் இருக்கும்.
கைப்பிடியளவு உப்பை சிறிய மூட்டையாக கட்டி அரிசி சாக்கு போட்டு வைக்க, அதில் பூச்சிகள் ஏதும் அண்டாது.
உணவில் உப்பு அதிகமாக விடும் பட்சத்தில் உருளைக்கிழங்கை அப்படியே சேர்த்து உப்பை குறைக்கலாம்.
எலுமிச்சை பழச்சாற்றை காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.
சர்க்கரை டப்பாவில் கிராம்புகளை சேர்த்து வைத்தால் எறும்புகள் வராது. இடியாப்பத்தினை தயிரில் ஊறவைத்து வெயில் காய வைத்து நல்லெண்ணெயில் பொறித்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க சிறிதளவு தேங்காய் துண்டை சேர்த்து வைக்க வேண்டும்.