சுவையான காரசாரமான பருப்பு உருண்டை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!! இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க..!!



Delicious spicy paruppu urundai

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பாரம்பரிய உணவு என சத்துமிக்க உணவுகள் நிரம்பி இருக்கும். அந்த வகையில் இன்று கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய உணவான காரசாரமான உணவு குறித்து காணலாம். இது கர்நாடக மாநிலத்தில் பருப்பு உருண்டை என்றும் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு - 2 கிண்ணம் 

தண்ணீர் - 1 லிட்டர் 

பச்சை மிளகாய் - 10 

இஞ்சி - சிறிதளவு 

தேங்காய் துருவல் - 1 கிண்ணம்

வெந்தய இலை - 2 கிண்ணம் 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - 2 தேக்கரண்டி

Latest news

செய்முறை : 

★முதலில் எடுத்துக்கொண்ட வெந்தய இலைகளை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் துவரம்பருப்பை கழுவி ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 

★பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, ஊறவைத்த துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

★அரைத்த மாவுடன் தேங்காய்துருவல், வெந்தய இலை, உப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றி இட்லி தட்டை மேல் வைத்து பருப்பு கலவையை பந்துபோல உருட்டி அல்லது கொழுக்கட்டை போல உருட்டி இட்லி போல வேகவைத்து எடுத்தால் சுவையான பருப்பு உருண்டை தயார். இவற்றை சட்னி வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.