பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
சுட சுட வடை தயார்..பழைய சாதத்தில் மொறு மொறு வடை செய்வது எப்படி.! இதோ அருமையான டிப்ஸ்!
தற்போது மழை காலம் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் சூடான உணவு வகைகளை தான் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். இருப்பினும் மழைக்காலத்தில் வடிக்கும் சாதம் அடுத்த வேலை சாப்பிட முடியாமல் வீணாகும்.
அப்படி வீணாகும் சாதத்தை வைத்து சுடசுட மொறு மொறு வடை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழைய சாதம் – 2 கப்,
அரிசி மாவு – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி சிறிய துண்டு – ஒன்று,
கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,
உப்பு தேவையான அளவு
இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.அதனுடன் சிறிய துண்டு இஞ்சியை தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் சாதத்துடன் அரிசி மாவு தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய பெருட்களையும் சேர்த்து பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் உற்றி நன்கு சூடானதும் அதில் வடையை போட்டு எடுத்தால் மொறு மொறு வடை நொடியில் தயாராகி விடும்.இதை மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து கொடுத்து பாருங்கள் அதன் சுவையே தனி தான்.