மச்சினியை வீடியோ எடுத்த மச்சான்... செல்போன் முழுவதும் குளியல் வீடியோக்கள்.!! விசாரணையில் அதிர்ச்சி.!!
திருப்பத்தூர் அருகே மனைவியின் தங்கை குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரின் செல்போனை பரிசோதனை செய்ததில் பல பெண்களின் குளியல் வீடியோக்கள் இருப்பதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொழுந்தியா குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற நபர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வசித்து வருபவர் சதீஷ்(30). இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் சதீஷ் தனது மனைவியின் தங்கை குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது தொடர்பாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கைது செய்து விசாரணை
சதீஷ்க்கு எதிராக உறவினர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட சதிஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!
பல பெண்களின் குளியல் வீடியோக்கள்
அதில் பல பெண்களின் குளியல் வீடியோக்கள் சதீஷின் மொபைலில் இருப்பதை கண்ட காவல்துறை அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது செல்போனையும் சைபர் துறையின் ஆய்விற்காக அனுப்பி இருக்கின்றனர். கொழுந்தியா குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "ஒருத்தன் போதாதா உனக்கு.." கள்ள காதலை கண்டித்த மாமியார்.!! தூக்கில் தொங்க விட்ட மருமகள்.!!