மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவாரா நீங்கள்? இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள்
சென்னையில் ஒரு தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் உணவை பாதி வழியில் பிரித்து சாப்பிடும் வீடியோ கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் சென்னை உணவகங்களில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி மற்றும் நாய் இறைச்சியை பயன்படுத்துவதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனால் உணவகங்களில் சென்று சாப்பிடுபவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி சென்று சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது. இதனால் உணவக உரிமையாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதைப் போன்ற உணவகங்களுக்கு இப்போதைய காலகட்டத்தில் மிகவும் உதவியாக இருப்பது தனியார் டெலிவரி நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்களால் உணவகங்களில் வியாபாரங்கள் சற்று அதிகரிக்கத் துவங்கியது. மேலும் வாடிக்கையாளர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே உணவுகளும் கிடைக்க ஆரம்பித்தன. நள்ளிரவில் கூட அவர்கள் செய்யும் இந்த பணியாள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இதைப் போன்ற நிறுவனங்களின் மதிப்பை குறைக்கும் வகையில் சில ஊழியர்களின் செயல் இருந்து வருகிறது. சென்னையில் அப்படி ஒரு தனியார் டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு உணவை கொண்டு செல்லும் வழியில் வண்டியை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் தான் கொண்டு வந்த ஒவ்வொரு பார்சலையும் பிரித்து உணவை சாப்பிடும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டடுள்ளது.
அந்த ஊழியர் ஒரு ஸ்பூனை பயன்படுத்தி அனைத்து பொட்டலங்களிலும் உள்ள உணவை சாப்பிடும் காட்சி பார்ப்போருக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இதைப் போன்ற சம்பவங்களால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.