"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
அதிர்ச்சி! வீட்டின் குளிர்சாதன பெட்டி (ப்ரிட்ஜ்) வழியாக உருவாகும் டெங்கு கொசுக்கள்! மக்களே உஷார்!
சாதாரண கொசுதானே என எண்ணிய காலம் மாறி, தற்போது கொசு என்றாலே மக்கள் மத்தியில் பீதி கிளம்புகிறது. அதற்கு காரணம் உயிரை கொள்ளும் டெங்கு கொசுக்கள்தான். மழைக்காலம், குளிர்காலம் வந்தாலே டெங்கு மீதான பயம் மக்கள் மத்தியில் அதிகரித்துவிடுகிறது.
அரசாங்கமும் டெங்கு பாதிப்பினை தடைசெய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் ஒருசில இடங்களில் டெங்குவால் ஏற்படும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்தவருடம் மட்டும் அதிகமானா மக்கள் டெங்கு கொசுவால் உயிரிழந்தனர். இந்த வருடமும் டெங்கு காய்ச்சலால் மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
பொதுவாக அசுத்தமான இடங்கள், சாக்கடைகள் போன்ற இடங்களில்தான் கொசுக்கள் உற்பத்தியாக்குகின்றன. ஆனால், இந்த டெங்கு கொசுக்கள் மட்டும் தூய்மையான நீர், பாத்திரங்கள், பழைய டயர்கள் போன்றவற்றில் தேங்கியுள்ள நீரில்தான் அதிகம் உற்பத்தியாகுகிறது.
பொதுவாக இந்த விஷயங்கள் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத அதிர்ச்சியான ஒரு விஷயம் உள்ளது. நம் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் மூலமும் டெங்கு கொசு உற்பத்தியாக்குகிறதாம். ஆம், நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளின் பின்புறத்தில், குளிர்சாதன் பெட்டியில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்க ஒரு தட்டு இருக்கும். அந்த தட்டில் நீரானது சேமிக்கப்படும். ஆந்த நீரில் இருந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளதாம்.
எனவே இப்போது உங்கள் குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்துங்கள், மேலும் அவ்வப்போது அதை சுத்தம் செய்யுங்கள். பெரும்பாலும் அதில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இந்த தகவலை உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.