மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் உள்ள நச்சுக்களை ஒரே வாரத்தில் வெளியேற்ற இந்த ஒரு பானம் போதும்.! ட்ரை பண்ணி பாருங்க.!?
தற்போதுள்ள மாசு நிறைந்த சுற்றுச்சூழலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக நாம் சுவாசிக்கும் காற்று முதல் உண்ணும் உணவு வரை எதிலும் முழுவதுமாக சுத்தமானது என்று கூற முடியாது. அந்த அளவிற்கு சுற்றுச்சூழலில் மாசு நிறைந்துள்ளது. இதனால் உடலில் சேரும் நச்சுக்களை நீக்குவது மிகவும் அவசியமானதாக இருந்து வருகிறது.
இவ்வாறு உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குவதற்கு டிடாக்ஸ் பானங்கள் குடித்து வரலாம். குறிப்பாக மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் ஒரே வாரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த டீ டாக்ஸ் பானம் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர், ஆப்பிள், இஞ்சி, வெள்ளரிக்காய், பார்ஸ்லி, சியா விதைகள்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் இளநீர் ஊற்றி அதில் ஆப்பிள், இஞ்சி, வெள்ளரிக்காய், பார்ஸ்லி, சியா விதைகள் போன்றவற்றை போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் சேரும் அதிகப்படியான நச்சுக்கள் ஒரே வாரத்தில் வெளியேறும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் இது கல்லீரல் மற்றும் கிட்னி பகுதியில் சேரும் நச்சுக்கள் மற்றும் கற்களை வெளியேற்றுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கண்பார்வை குறைவாக இருப்பவர்கள் இந்த டீ டாக்ஸ் பானத்தை குடித்து வருவதன் மூலம் கண்பார்வை தெளிவு பெறும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த பானத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.