மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு!
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நூடுல்ஸ் மைதா மாவினால் ஏற்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவு. அதேபோல் சோடியம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே இது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக இருப்பதால் சத்தான உணவாக கருதப்படுவதில்லை.
நூடுல்ஸில் சோடியம் மற்றும் கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் இது கெட்ட கொழுப்பை அதிகரிக்கவும், நல்ல கொழுப்பை குறைக்கவும் செய்யும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்து உள்ளது.
நூடுல்ஸில் நார்சத்து குறைவாக இருப்பதால், மலச்சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள கொழுப்பு செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே நூலில் சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.