#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாய் துர்நாற்றம் நீங்க, மோரில் இந்த ஒரு பொருளை கலந்து கொப்பளித்து பாருங்க.!?
பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் உடலில் சாதாரணமாக நோய்கள் ஏற்பட்டாலே உடனடியாக ஆங்கில மருத்துவத்தை நாடுகிறோம். ஆனால் இந்த ஆங்கில மருத்துவ முறையில் பலவிதமான பக்க விளைவுகள் உடலில் ஏற்படுத்துகிறது. இதற்கு பதிலாக ஒரு சில சாதாரண நோய்களுக்கு நம் முன்னோர்கள் காலத்தில் செய்து வந்த பாட்டி வைத்திய முறையை செய்வதன் மூலம் நோயும் எளிதில் குணமாகும். நோய்களை எளிதில் குணப்படுத்த என்னென்ன பாட்டி வைத்திய முறைகள் உள்ளன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. வாய் துர்நாற்றம் நீங்குவதற்கு ஒரு டம்ளர் மோரில் சமையல் சோடா கலந்து வாய் கொப்பளித்து வரலாம்.
2. உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள், பாத எரிச்சல் உள்ளவர்கள் உள்ளங்கால் மற்றும் கைகளில் விளக்கெண்ணெய் தேய்க்க வேண்டும்.
3. மோரில் பெருங்காயம் கலந்து குடித்து வந்தால் வயிறு உப்புசம் நீங்கும்.
4. புண்கள் மற்றும் காலில் முள் குத்தி நீர் கோர்த்து இருந்தால் எருக்கம்பாலை தேய்க்கலாம்.
5. வாய் வெடிப்பு, வாய் புண் குணமாக ருத்ராட்சக் கொட்டையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வாய் கொப்பளித்து வந்தால் குணமாகும்.
6. அரச மரத்தின் பாலை காலில் தடவி வந்தால் பித்த வெடிப்பு நீங்கும்.
7. கீழாநெல்லி இலையை அரைத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.
8. தாமரை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
9. பித்தம் குறைய ரத்த கொதிப்பு கட்டுப்பட அகத்திக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்வது நல்லது.
10. குழந்தைகளுக்கு வயிற்றுப்போச்சு நீங்க வெப்பம் குழந்தை பச்சையாக சாப்பிட கொடுக்கலாம் அல்லது சிறிது தயிர் சேர்த்து அரைத்து உருண்டையாக சாப்பிட தரலாம்.
இவ்வாறு உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் நோய்களை எளிதில் குணப்படுத்த நம் முன்னோர்கள் பல பாட்டி வைத்திய முறைகளை குறிப்பிட்டுள்ளனர். இவற்றை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழலாம்.