திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உஷார்... சாப்பிட்ட பின் குளிப்பதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா?.. அதிர்ச்சி தகவல்..!!
சாப்பிட்ட பிறகு குளிப்பதால் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமான பிரச்சினை ஏற்படுத்துகிறது.
சிலர் தினமும் காலையில் எழுந்ததும் குளிக்காமல், சாப்பிட்ட பின் குளிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். அது மிகவும் தவறான பழக்கமாகும். தினமும் அவ்வாறு சாப்பிட்ட பின் குளிப்பதால், ரத்த ஓட்டம் குறைந்து செரிமானம் நடைபெறுவது தாமதமாக இருக்கிறது.
சாப்பிட்ட பின் செரிமானம் நடைபெறுவதற்கு உடல் ஒத்துழைக்கும் நேரத்தில் குளிப்பதால், செரிமானம் மந்தமாகிவிடுகிறது. இதனால் குடலில் உணவுகள் அப்படியே தங்கி விடுவதால் குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் சோர்வும் உண்டாகும்.
இதன் காரணமாக சாப்பிட்ட பின் அடுத்த 2 மணி நேரத்திற்கு குளிக்க கூடாது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. பொதுவாக சாப்பிடும் போது செரிமானத்திற்கு பயனுள்ள வகையில் ரத்தஓட்டம் அதிகரிக்கும். ஆனால் குளிக்கும் போது உடல் வெப்பநிலை குறைந்து, செரிமானத்தை மந்தமாக்கி விடுகிறது. இதனை நவீன மருத்துவ விஞ்ஞானம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
"சாப்பிட்ட பின் குளிப்பதால் உடல் வெப்பநிலை குறைந்து, இரத்த ஓட்டம் திசை திருப்பப்படுகிறது. இதன் விளைவாக செரிமானத்திற்கு உதவும் ரத்தம், வெப்பநிலையை பராமரிப்பதற்காக சருமத்தை நோக்கி பாய ஆரம்பிக்கிறது. இதனால் செரிமான செயல்பாடு தாமதமாகி பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளது. இதனால் சாப்பிடுவதற்கு முன் குளிப்பது தான் எப்பொழுதும் நல்லது.